பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகள் யாவும்இ குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே ஆசிரியர்கள் முன்னெடுப்பார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆரம்பப் பாடசாலைகள் யாவும் நேற்று திங்கட்கிழமை (25) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ அதிபர்இ ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.
அதன்படிஇ பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுஇ காலை 7.30க்கு ஆரம்பிக்கப்படும் கற்பித்தல் செயற்பாடுகள் யாவும் பிற்பகல் 1.30க்கு நிறைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர இதர வேலைகள் எவற்றையும் ஆசிரியர்கள் செய்யமாட்டார்கள்.
அதேநேரத்தில் சம்பள முரண்பாடு உள்ளிட்ட எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையிலும் எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.
இதேவேளைஇ கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு
முன்பாகஇ நேற்று (25) பாடசாலைகள் நிறைவுற்றதன் பின்னர் ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.






