கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக் கட்சிகள், இதுவிடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன.
இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின் கீழ் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு ‘மொட்டு’ அரசுக்கு ஆதரவு வழங்கும் 10 பங்காளிக் கட்சிகள் தயாராகி வருகின்றன.
‘யுகதனவி’ விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும் அதனை ஜனாதிபதி நிராகரித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருடன் இது
சம்பந்தமாக பேச்சு நடத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்கள் மத்திக்குச் செல்வதற்கு அரசபங்காளிகள் வியூகம் வகுத்துள்ளன.






