இரசாயன உர பாவனையால் நாட்டில் இன்று 60 இலட்சம் சிறுநீரக நோயாளர்கள் இருக்கின்றனர் என காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்இ
எமது நாட்டு மக்கள் இரசாயன உரத்துக்கு அடிமையாகி 60 வருடங்கள் கடந்துள்ளன.
அதேப்போல் இரசாயன உரப் பாவனையால் எமது நாட்டில் 30இ000 புற்றுநோயாளர்கள் இருக்கின்றனர்.
வருடாந்தம் 12இ000 சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்இ 10இ000 பேர் வருடாந்தம் இறந்து போவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாகவேஇ அதிலிருந்து விடுபடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துஇ நல்ல விடயத்தை முன்னெடுத்தாலும் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் இருக்கின்றனர்.
விசேடமாக சஜித் பிரேமதாசவின் கூட்டம்இ அநுர குமாரவின் கூட்டமே இவர்களை வழி நடத்துகிறது.
சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்தம் செய்ய வருடாந்தம் பில்லியன் கணக்காக செலவிடும் நிதியை குறைக்க முடிந்தால் எம்மால் விவசாயிகளின் உற்பத்திக்கு அதிக பணத்தை கொடுக்கலாம்.
அத்துடன் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி தானிய வகைகள்இ மரக்கறிஇ பழங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் நாடாக மாத்திரமின்றி சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.
ஆனால் நாம் இன்னும் 10 வருடங்களுக்கு இரசாயன உரத்தைப் பயன்படுத்தினால் நாட்டில் 50 சதவீதமானவர்கள் நோயாளர்களாக மாறிவிடுவர் என மேலும் தெரிவித்தார்.






