ஈழத்தின்…

ஈழத்தின் புகழ் பூத்த முன்னணிக் கவிஞர் அமரர் பாண்டியூரானின் கவிதைகளின் தொகுப்பொன்றை கிழக்கு மாகாண பன்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தற்போது நூல் வடிவில் பதிப்பித்துள்ளது.

இத் தொகுப்பு நூல் வெளிவருவதில் திணைக்களத்துடன் இணைந்து பெரும் பங்காற்றிய பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம், இந் நூல் அறிமுக நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அமைப்பின் தலைவர் திரு.சுவேந்திரராஜா தலைமையில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நூல் அறிமுக நிகழ்வை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply