நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், குளியாப்பிட்டியில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் மஞ்சுள டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
குளியாப்பிட்டி – எலத்தலவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குளியாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் அப்பகுதியில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்துடன் தொடர்புடையவர்கள்.
அதன்படி, மக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், நாட்டில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






