குடிபோதையில் நபரொருவரை தாக்கிய பொலிஸார்..! வெளியானது மற்றொரு காணொளி!

குடிபோதையில் காணப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், வீதியால் சென்ற நபரொருவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி, குடிபோதையில் இருந்ததாக தாக்குதலுக்கு உட்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், இளைஞன் ஒருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதன் அடிப்படையில், தற்போது வீதியால் சென்ற நபர் மீது தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் அதிகரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply