திருமலையில் விசேட தேவையுடைய குடும்பத்திற்கு நிரந்தர வீடு கையளிப்பு

திருகோணமலை -குச்சவெளிப் பிரதேசத்தில் விசேட தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடொன்று குச்சவெளிப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ், வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால், குறித்த நிரந்தர வீடு நேற்று அவை பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

ஓலைக் குடிசை மற்றும் தகரக் கொட்டில்களில் நீண்டகாலமாக பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் வறுமை நிலமைககை் கருத்திற் கொண்டு,வன்னி ஹோப் நிறுவனமும் மக்கள் சேவை மன்றமும் இணைந்து நிரந்தர வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் மேற்படி வீடு நிர்மாணித்து குறித்த பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த வீடானது, சுமாா் மூன்று இலட்சம் பெறுமதி கொண்டு காணப்படுவதோடு, வீட்டின் நிர்மாணிப்பு பணிக்காக அவுஸ்ரேலியா- சிட்டியினில் வசிக்கின்றவர்களால் அன்புளிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடன் இரண்டு நாட்கள் நடமாடியுள்ளார் கஜேந்திரன்

மொட்டு’ வின் பங்காளிகள் அதிரடி ஆட்டத்திற்கு தயார்!

Leave a Reply