மீனவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்தை கண்டித்து, இன்றைய தினம் குருநகர் பகுதியில் மீனவர்களால் போராட்டம் முன்னடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு கடையடைப்பும் இடம்பெற்றது.
யாழில் இன்று செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக மீனவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெருவித்ததையடுத்து, குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கடையடைப்பும் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பல மீனவ சங்க பிரதிநிதிகள் குறித்த போராட்டத்தில் பங்குபற்றிய தோடு, போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மற்றும் கல்லு,கழிவிப்பொருட்களால் தாக்குதலும் மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.