பல்கலை மாணவர்கள் தடுப்பூசி ஏற்றுவதில் அக்கறையற்ற நிலை!

பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாத் தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று தடுப்பூசி பெற்றவர்களின் இறப்பு வீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியைப் பெற ஆர்வம் காட்டவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *