தமிழக இசைத்துறையில் யொஹானி பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

இலங்கை பாடகி யொகானி டி சில்வாஇ தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போதேஇ அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்இ

‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடல்இ உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யம் அடைந்திருக்கலாம்.

ஆனால் அதற்காக அவர் தமிழக இசைத்துறையில் வந்து பாடுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஈழத்தின் இசைப்பாடகியாக இருந்த இசைப்பிரியா போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன்இ பல ஆயிரம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுஇ பல ஆலயங்களும் அழிக்கப்பட்டன.

இதற்கெல்லாம் காரணமாக இருந்தவரின் மகளான யொகானிஇ தமிழக இசைத்துறையில் பாடுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply