
ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த குறித்த வழக்கை கைவிடுமாறு பதில் நீதவான் சஞ்சய கமகே உத்தரவிட்டுள்ளார்





