பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரை நியமிக்க நாடாளுமன்ற சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய முன்வைத்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்தமையையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றியதுடன், சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கப் பணிப்பாளர் நாயகத்திலும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ குற்றவாளி தலைமையில் செயலணியா? சாணக்கியன் கேள்வி






