மண்வெட்டியால்தான் அடித்து விரட்டுவோம்!

“விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவருக்கு மண்வெட்டி தான் பதிலளிக்கும்” என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பதுளை – வெலிமடை விவசாயிகள் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.

இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா? என்றும் அமைச்சரிடம் அவர்கள் சவால் விடுத்தனர்.
இரசாயன உரப் பாவனைக்கு இலங்கையில் தடை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
……….

Leave a Reply