கொரோனாவால் மூடப்பட்டது செயலக பிரிவு

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்து, மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திட்டமிடல் கிளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a Reply