மழை வெள்ளத்துடன் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை!

பாரதிபுரம் பகுதியில் மழை வெள்ளத்துடன் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது.

குறித்த பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில் குடியிருப்பு காணிக்குள் குறித்த முதலை நுழைந்துள்ளது.

இதனால், வீட்டு வளர்ப்பு நாயின் வழமைக்கு மாறான சத்தத்தை அவதானித்த குடியிருப்பாளர் முதலையை அவதானித்ததை அடுத்து, படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, குறித்த முதலை பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டமற்ற முறிகண்டி குளத்தை அண்மித்த பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply