வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திற்குரிய பகுதியில் உள்ள மதவாச்சியில் இருந்து 1,330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதன் மூலம் இன வீதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் அரசின் இரகசிய நகர்வை எதிர்த்தே தமிழ் தேசிய மக்கள் முண்ணனியால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply