இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர், புதிய அரசியலமைப்பு, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஐரோப்பிய ஒன்றியமும், பயங்கரவாத தடைசட்டமும் மற்றும் தற்போது நடைபெற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.






