கம்பஹா, மினுவாங்கொட ஹோரம்பெல்ல நவலோக பிரதேசத்தில், வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் மரண வீட்டில் கலந்துகொண்ட 35 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண வீட்டை சேர்ந்தவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பின்பு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், மரண வீட்டில் பங்கேற்றவர்களில் சிலருக்கு தொண்டை நோ, காய்ச்சல் உள்ளிட்ட அருகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, மரண வீட்டில் பங்கேற்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 35 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மரண வீட்டுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் வருகை தந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
எனவே, இந்த மரண வீட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை பொதுசுகாதார பரிசோதகர்கள் திரட்டி வருகின்றனர்.






