பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் இன்று இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான 50 வயதுடைய பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் போடப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றை பெண்ணுக்கு சாதகமான முறையில் முடித்துக் கொடுப்பதற்காகஈ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்த பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.

இதுதொடர்பில், குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், புத்தளத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர், நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதுதொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அசங்க விதானகே தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply