அரச, தனியார் துறையினருக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அவசியமாகும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மற்றும் ஜே.வி.பியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த பாதீட்டில் வேதன அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
ஆட்சியாளர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்தால் தாங்களும் அதற்கு தயார் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.






