அனுராதபுரம், ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் பயிலும் 30 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களில், உடல் நலம் குறைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டிருந்த சுமார் 100 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.






