வடக்கில் நிரந்தர நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கில் நிரந்தர நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஏனையோரிற்கான நியமனம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் நியமனம் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்வர்கள் கருத்து தெரிவிக்கையில்,

‘நாங்கள் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வருகின்றோம். மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம்.

ஆனால், 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு, தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

நவாலி வீதியில் இன்று குவிந்த பொலிஸார்!

Leave a Reply