தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் நாளை யாழில் சந்திப்பு!

யாழ்ப்பாணம், திண்ணை ஹோட்டலில் நாளை காலை பத்து மணிக்கு தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கானவே இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply