எதிர்கால எரிசக்தி அமைச்சர் ஷொயன் சேமசிங்கவுக்கு வாழ்த்துக்கள்! உதய கம்மன்பில

எதிர்கால எரிசக்தி அமைச்சர் ஷொயன் சேமசிங்கவின் பதவிக்காக அவருக்கு மனமார வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சம்பந்தமாகத் தான் கூறியது உண்மையானது கருத்து என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் மிகவும் ஊழல் மிக்க அரசாங்கம் எனத் தான் கூறியமைக்கு சேமசிங்க தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்காது அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் மிக மோசமான ஊழல் அரசாங்கம் என்றால், ஏன் அதில் அங்கம் வகிக்க வேண்டும் என ஷொயன்சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஏனைய கூட்டணிக் கட்சிகள் கொழும்பில் நடத்திய கூட்டம் தொடர்பாக அனுராதபுரம் கஹாட்டகஸ்திலிய நகரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply