கல்குடா தொகுதியில் குழாய் கிணறு ஒன்றை, கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கும் திட்டத்தில், கல்குடா தொகுதியில் குழாய் கிணறு கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அதன்படி, கல்குடா மற்றும் கொண்டயன்கேணி ஆகிய இரண்டு இடங்களில், குழாய் கிணறு பயனாளிகளுக்கு கையளிப்பு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, குழாய் கிணறுகளுக்கான நிதியுதவியினை கனடாவில் வாழும் வீடு விற்பனை முகவர் மோகன் கம்றசன் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






