நாட்டில் கொரோனாப் பலியெடுப்பு 13,760 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 17 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மேலும் 408 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுவரை இலங்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 541,481 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 294 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனைடுத்து, நாட்டில் இதுவரையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 513,092 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply