திருமலையில் விழுந்து கிடந்த இளைஞன்- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருகோணமலையில் 21 வயது இளைஞன் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில், இளைஞன் ஒருவன் விழுந்து கிடந்துள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்றிரவு 7.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், கன்தலாவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசில மல்சான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 13 ஆம் கட்டை சந்தியில் இளைஞன் ஒருவன் வீதியோரத்தில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக 1990 அவசர அம்பியுலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, உடனடியாக அருகில் உள்ள தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

நடந்து சென்ற இளைஞனை வாகனம் மோதி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அருகில் குடையொன்று காணப்படுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply