உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்டின் பூதவுடல்

காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 8ஆம் திகதி, கம்பளை வைத்தியசாலையில் இருந்து பொலிஸ் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவன் காணாமல்போயிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் உள்ள நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவருடைய சடலம் மீதான பிரேத பரிசோதனை கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, உடற்பாகங்க இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் கிடைக்கும் அறிக்கைக்கு அமைவாகவே மேலதிக விடயங்கள் தெரியவரும் எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை,உறுதிப்படுத்தப்பட்ட விடயங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply