தமிழ்த் தரப்புக்களும் முஸ்லிம் தரப்புக்களும் அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவது மிக அவசியம்! ஹக்கீம்

தமிழ்தரப்புக்களும் முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்பது மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் நடந்திருக்கின்றது.

அடையாள ரீதியாக நாம் இன்று சந்தித்தாலும், எதிர்வரும் காலங்களில் நாங்கள் இதனை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

தமிழ்தரப்புக்களும் முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.

அனைத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply