நாட்டில் நாளை அல்லது நாளை மறுதினம் மின்தடை ஏற்படாது எனவும், அது குறித்த சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சாரசபை ஊழியர்களும் நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஏனைய தொழிற்சங்கங்களும் நாளை ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படலாம் என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில், மின்சார சபை இவ் அறிவிப்பை விடுத்துள்ளது.






