யாழில் முகக்கவசம் அணியாத 25 பேர் கைது!

Man in handcuffs behind his back

யாழ்ப்பாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்பொழுது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடியுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந் நடவடிக்கைக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவுத் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply