திருகோணமலை – கல்மிட்டியாவ பகுதியில், பாடசாலை பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாகவே இப்போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்து, கல்வி கற்பதற்கான உரிமைகளை உறுதிப்படுத்து, கல்வி ஊடாக தேசிய உற்பத்திக்கு ஆறு வீதம் ஒதுக்கு, தொற்று நோய் காரணமாக முடக்கப்பட்ட கல்வியை கட்டியெழுப்பு போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுத்தனர் .
அமைதியான முறையில் சுமார் பத்து நிமிடங்கள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்ததுடன், அதன்பின் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







