யாழ். கைதடி பகுதியில் வசிக்கும் 32 வறிய குடும்பங்களுக்கு, பூமணி அம்மா அறக்கட்டளையின் கீழ் வாழ்வாதார நிவாரணப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கைதடி, மேற்கு ஜே.293 கிராம சேவையாளர் பிரிவுப் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்ட்டுள்ளன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் பணிப்பாளருமான சரவணையூர் விசு. செல்வராசா நெறிப்படுத்தலில் இந் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில், அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன், செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், பொருளாளர் ரி.யோசேப், கைதடி பகுதி சமூக செயற்ப்பாட்டாளரும் இன்றைய நிகழ்வின் ஏற்;பாட்டாளருமான லயன் து.மகேந்திரன், சமூக செயற்பாட்டாளர் மகேந்திரன் நிர்மலா, அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர் இ.மயில்வாகனம், கோப்பாய் பிரதேச தேசோதய சபை ஏற்ப்பாட்டாளர் ந.மதன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.








