முருத்தெட்டுவே தேரரின் நியமனத்துக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்ததேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர் சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது ஒருபோதும் அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையிலோ அமையக்கூடாது.

வேந்தருக்கு சட்டப்பூர்வ நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அவர் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தின் சின்னமாக, குறிப்பாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கான அரசியல் நியமனம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரத்தையும் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் அழிக்கக்கூடும் என மாணவர் ஒன்றியமும், மாணவர் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply