யாழில் சுகாதாரத் தொண்டர்கள் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியமனம் கிடைத்தும் பணிக்கு அமர்த்தப்படாத காரணத்தால் தொடர்ச்சியாக ஓன்பது மாதங்களாக இப்போராட்டத்தில் சுகாதாரத் தொண்டர்கள் ஈடுபட்டுவந்தனர்.

இப்போராட்டத்தை அடுத்து, ஏதிர்வரும் செவ்வாய்க்கிழமை இவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என இன்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

ஆகவே, இப்போராட்டத்தை இன்றுடன் கைவிடுவதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply