வவுனியா, வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியிலிருந்து, குருமன்காடு நோக்கி ஒரே பகுதியால் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்துக்குள்ளானது.
இச் சம்பவத்தில்ஈ மோட்டார் சைக்கிளை செலுத்தி இருவரும் காயமடைந்துள்ளனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







