மரந்தகஹமுல அரிசி சந்தையில் சம்பா, நாட்டரிசி கடந்த வாரத்தை விட 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பா அரிசியின் மொத்த விலை கிலோ ஒன்றிற்கு 155 ரூபாவாகவும், நாட்டரிசியின் மொத்த விலை கிலோ ஒன்றிற்கு 135 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ அரிசியின் விலையை குறைத்து விற்பனை செய்ய மரந்தகஹமுல அரிசி விற்பனையாளர்கள் சங்கம் முயற்சித்த போதிலும், நிலவும் விலை காரணமாக அதனைச் செய்ய முடியவில்லை என மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் கருணாதிலக தெரிவித்தார்.






