வெல்லவாய வீதி விபத்தில் ஒருவர் பலி

வெல்லவாய-தனமல்வில வீதியின் புதுராகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியின் குறுக்காக மாறுவதற்கு முற்பட்ட மிதிவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் புதுராகல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply