தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் ஆளுநர்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அதேநேரம், தீபாவளிப் பண்டிகையும் இடம்பெறுகின்றது.
எனவே, சிறுவர்களின் உள ஆரோக்கியம் மற்றும் பண்டிகை என்பவற்றைக் கருத்தில்கொண்டு வெள்ளிக் கிழமை விடுமுறை வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.






