அதிபர்கள் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரி புத்தளத்தில் உள்ள தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தளம், கற்பிட்டி மற்றும் மதுரங்குளி ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புத்தளம் சாஹிர ஆரம்ப பாடசாலை, கற்பிட்டி நுரைச்சோலை மு.ம.வி (தேசிய பாடசாலை) , மதுரங்குளி சிங்கள மஹா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது, ஆசிரியர்களின் உரிமைகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த வேண்டாம் எனவும், கல்விக்கு 6 சத வீதம் நிதி ஒதுக்கீடக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.










