
நல்லூர் கந்தசுவாமி கோவில் ஸ்கந்தஷஷ்டி உற்சவம் நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார துறையினரது அறுவுறுத்தலின்படி பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தால் உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை கோவிலின் உத்தியோகபூர்வ ‘யூரியூப்’ தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகையால், ஸ்கந்தஷ்ஷ்டி உற்சவ காலத்தில் உற்சவ நேரங்களின்போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின்படி பக்தர்களுக்கு கோவிலினுள்ளும் வெளிவளாகத்திலும் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு உற்சவ நேரங்களின்போது கோவிலுக்கு வருவதனை தவிர்த்து வீடுகளிலிருந்து தூர தரிசனம் செய்யுங்கள் என கோவில் நிர்வாக அதிகாரி கேட்டுக்கொண்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, நிகழ்வுகளை https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured – என்ற தளத்தில் பார்வையிடலாம்





