நாகப்பட்டினத்தில் கஞ்சாவை கடத்தி இலங்கைக்கு படகு மூலம் விற்பனை செய்ய முயற்சித்த நபர் கைது!

ஆந்திராவிலிருந்து, நாகப்பட்டினம் வழியாக அம்புலன்ஸ் மூலம் சுமார் 200 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, அதை இலங்கைக்கு படகு மூலம் விற்பனை செய்ய முயற்சித்த நபரை தஞ்சாவூர் சரக தனிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமாரின் உத்தரவில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனின் மேற்பார்வையில், தஞ்சாவூர் தனிப்படையினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 200 கிலோ கஞ்சா, ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தனிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி எனவும் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் சரக தனிபடையினருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply