முகப்புத்தகத்தில்; உள்ள facial recognition வசதியை தடை செய்வதற்கு மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பேஸ்புக் சமூகவலைத்தள பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயனார்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அண்மைய காலமாக பல சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






