மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு! கசிப்புடன் பெண்ணொருவர் கைது!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவண்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், இன்று புதன்கிழமை (03) காலை திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்ணுடன் 165,000 மில்லி லீற்றர் கசிப்பு, 30,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் பெருமளவு கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

இதனை, குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பணிடார தெரிவித்தார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத மாசிங்கவின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட இந்சுற்றிவளைப்பில் கைதான பெண், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.

Leave a Reply