மாங்குளம், ஒட்டுசுட்டான் வீதியில் காட்டு யானைகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில், நேற்று மாலை ஒட்டுசுட்டான் வீதியில்; வதந்த காட்டு யானை ஒன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் வீதிக்கு குறுக்காக நின்றமையால், பயணிகள் வீதியால் பயணிப்பதில் பல்வேறு இடர்பாடுகளை மேற்கொண்டனர்.
இதுதொடர்பில் வனயீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த இடத்துக்கு வந்த வனயீவராசிகள் திணைக்களத்தினரால் குறித்த யானை காட்டுக்குள் விரட்டிவிடப்பட்டது.
இப் பகுதியில் யானைகளால் ஏற்படும் இடர்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








