நில அளப்புக்கு மக்கள் எதிர்ப்பு!

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை ஜே/ 226 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 0.6474 ஹெக்ரேயர் காணிகளை, இலங்கைக் கடற்படைக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கை, மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

இலங்கைக் கடற்படையின் உத்தர மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்பு நிலையத்தை அமைப்பதற்காக குறித்தகாணியை அளவீட்டு திணைக்களத்தினர் நேற்றுக்காலை அளக்கச்சென்றிருந்தனர்.

அவர்கள், கடற்படை முகாம் அமைந்திருக்கின்ற குறித்த பகுதிக்கு வருகை தந்தபொழுது அங்குகூடியிருந்த காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், கலையமுதன், சர்வேஸ்வரன் நவரத்தினம், பார்த்திபன் ரஜீவ்காந், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்களும் ஆகியோர் காணி அளவீட்டுக்கு கடும்எதிர்ப்பை வெளியிட்டனர். அதனால், காணி அளவிடும் நடவடிக்கையைக் கைவிட்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச்சென்றனர்.

Leave a Reply