கிளிநொச்சி, கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் உள்ளூர் உற்பத்திகளூடாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் ஆலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் ஆகியோர் திறந்து வைத்தனர்.







