நடிகர்-ரஜினிகாந்த்
நடிகை-நயன்தாரா
இயக்குனர்-சிவா
இசை-இமான்
ஓளிப்பதிவு-வெற்றி பழனிசாமி
Annaatthe Movie Review: ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரஜினிகாந்த், அநியாயத்தை தட்டி கேட்டு அடிதடி சண்டையில் ஈடுபட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அதிக பாசமாக இருக்கிறார் ரஜினி. விடுமுறைக்கு கீர்த்தி சுரேஷ் ஊருக்கு வரும் பொழுது திருவிழா போல் கொண்டாடுகிறார்.
உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
புதிய திரைப்படத்தில் நடிக்க தயாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவை காதலிப்பது என்று திரையில் ஜொலிக்கிறார்.
அண்ணாத்த அண்ணாத்த பாடல் வரிகள்
தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார்.
ஆனால், பெரியதாக எடுபடவில்லை. இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்ப்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘அண்ணாத்த’ ரசிகர்களுக்கு விருந்து.
[embedded content]





