
அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
நானோ நைட்ரஜன் திரவ உரத்தை சுமந்து கொண்டு, இந்திய விமானப்படையின் இரண்டு விசேட சரக்கு விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஒரு விமானம் 72,576 லிற்றர் நானோ நைட்ரஜன் திரவ உரத்துடன் நள்ளிரவு 12.06 மணிக்கும், மற்றொன்று 72,576 லீற்றர் உரத்துடன் அதிகாலை 3.02 மணிக்கும் நாட்டை வந்தடைந்துள்ளது.
விமான நிலையத்தை வந்தடைந்த இந்த உரத்தின் அளவுகளை கொழும்பில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் மத்திய களஞ்சியசாலைக்கு லொறிகள் மூலம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் அளவு (100,000 லீற்றர்) கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.





