வெலிகம − ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம், இன்று வியாழக்கிழமை காலை 8:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயலவர் என மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.






